தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-14 20:58 GMT

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம் செல்ல காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கவிதா, ஆலங்குளம்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

சாலை வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் முறையான சாலை வசதி இல்லை. ஆதலால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆபத்தான மின்கம்பம்

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பம் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. ஆதலால் மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பார்களா?

வெண்ணிலா, விருதுநகர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சில கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆதலால் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராஜபாளையம். 

Tags:    

மேலும் செய்திகள்