தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-24 20:07 GMT

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியாபுரம் கிராமத்தில் இருந்து அன்பின் நகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் சஞ்சீவிநாதபுரம் 1-வது தெருவிற்கு செல்லும் சாலை பள்ளமாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. மேலும் அப்பகுதி மக்களும் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை உயரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் கிழவிக்குளம் ஊராட்சி பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் அதிக விபத்துகளும் நடக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாலை அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பாதைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சீரான குடிநீர் வினியோகம்

விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து தெற்கு பொன்னாகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக போதுமான அளவு தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்