தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-26 20:45 GMT

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலா, காரியாபட்டி.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஷ், அருப்புக்கோட்டை.

தேங்கி நிற்கும் மழைநீர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக சில பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி, சாத்தூர்.

பஸ் வசதி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து மதுரைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை உள்ள பகுதியில் சாலைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம், சாத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்