தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொடர் மின்வெட்டு
மதுரை மாநகர் பெத்தானியாபுரம் 63, 64, 65 ஆகிய வார்டுகளில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினகரன், பெத்தானியாபுரம்.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் பூதகுடி பஞ்சாயத்து ரெங்கநாதன்புரம் மூக்கின் நகர் கணபதி தெரு பகுதியில் சாலைகளை மறைக்கும் அளவிற்கு கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி வழியே அவசர தேவைக்கு வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், திருமங்கலம்.
விபத்து அபாயம்
மதுரை கே.புதூர் ஜவகர்புரம் பகுதியில் இருந்து புதூர் வண்டி பாதை மற்றும் ரிசர்வ் லைன் செல்லும் மெயின் ரோட்டில் 3 பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தர்ராஜன், மதுரை.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி செல்லும் வழியில் நைனார் ஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கு பெரியாறு கால்வாயில் இருந்தும், சிறிய கால்வாய் மூலமும் தண்ணீர் கொண்டு செல்லப்படும். அந்த கால்வாய்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாண்டித்துரை, மேலூர்.