தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-23 18:51 GMT

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செட்டியார்பட்டி.

கூடுதல் பஸ் வேண்டும்

விருதுநர் மாவட்டம் சிவகாசி நகர் பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், சிவகாசி.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் நாய்க்கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம், சாத்தூா்.

வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு நடுத்தெரு கலையரங்கம் முன்பு உள்ள தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.

கால்நடைகள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கிழவிகுளம் பகுதியில் உள்ள சாலைகளில் தெருநாய்கள், பன்றிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தொல்லையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ளவர்கள் பகல், இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வரும்போது மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் படுத்துக்கொள்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கிழவிகுளம். 

Tags:    

மேலும் செய்திகள்