தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-21 21:25 GMT

நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்படுமா?

பொதுமக்கள், காரைக்குடி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இளையான்குடி.

சாலையில் சுற்றும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா, திருப்புவனம்.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ். மங்கலம் பிரியும் இடத்தில் ஒரு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து சமிஞ்கை விளக்குகள் ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

சேதமடைந்து வரும் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது. தற்போது இந்த பாலத்தில் மரம், செடிகள் வளர்ந்து பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே பாலம் சேதமடைவதற்குள் அதிகாரிகள் பாலத்தில் உள்ள மரம், செடிகளை அகற்றி பாலத்தை சீரமைக்க வேண்டும்.

காதர்மீரா, ராமநாதபுரம்.

கரடு முரடான சாலை

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக அம்மா உணவகம் சந்தை திடல் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

பஸ் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவண குமார், ராமநாதபுரம்.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் பஸ் நிலையம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டணம்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறு,சிறு விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? பாலாஜி, சிங்கம்புணரி.

Tags:    

மேலும் செய்திகள்