தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-05 19:14 GMT

சேதமடைந்த குடிநீர் தொட்டி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஆதலால் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக தொட்டியை விரைவாக சீரமைக்க வேண்டும்.

சங்கர், நாகம்பட்டி.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிவகாசி சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் உயரம் குறைவாக உள்ளது. பஸ், லாரி போன்ற வாகனங்கள் சாலையை கடக்கும் போது சிக்னல் விளக்கு தெரியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே சிக்னல் விளக்குகளின் உயரத்தை சரியான அளவுக்கு உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர்-சேத்தூர் சாலையோரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிறைந்து உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசைத்தம்பி, சேத்தூர்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பகுதியில் குப்பை தொட்டி கிடையாது. இதனால் குப்பைகள் அப்பகுதி சாலைகளில் தேங்கி மலைபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

மாரியப்பன், செட்டியார்பட்டி.

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வ.உ.சி. நகர் நீர் வரத்து ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே குப்பைகளை அகற்றி நீர்வரத்து ஓடையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-பொதுமக்கள், சத்திரப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்