தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-12 19:01 GMT

ெதாடர் மின்தடை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மகாராஜபுரம், மாத்தூர், கோட்டையூர், தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தொடர் மின்வெட்டை சரிசெய்ய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், தம்பிபட்டி.

வேகத்தடை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணற்ற மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி இருக்கும் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள், காரியாபட்டி.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், விருதுநகர்.

ஆபத்தான மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் அரசு மருந்து கிடங்கு அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா, விருதுநகர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கால்வாயிலிருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. தண்ணீர் கண்மாய்க்கு செல்லாததால் குறைந்த நீருடன் காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், பாவாலி. 

Tags:    

மேலும் செய்திகள்