தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் கட்டனூர் கிழக்கு காலனியில் இருந்து இருஞ்சிறை, நரிக்குடி செல்லும் சாலையில் அதிக விபத்துகள் நடக்கின்றன. மேலும் சாலையோரங்களில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாலகிருஷ்ணன், கட்டனூர்.
பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சிறுநீர் கழிவறையை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், ராஜபாளையம்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா நாரணாபுரம் கிராமம் முனியசாமி கோவிலில் இருந்து நாரணாபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்று உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூா்த்தி, நாரணாபுரம்.
அடிக்கடி மின்தடை
விருதுநகர் மாவட்டம் முகவூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீரான மின் வினியோகத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணகுமார், முகவூர்.
போக்குவரத்து ெநரிசல்
விருதுநகர் மாவட்டம் ஏழாதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-யிரம்பண்ணை பஜாரில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பட்டாசு ஆலை வாகனங்கள், லாரிகள், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் செல்வதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாலையும் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஏழாயிரம்பண்ணை.