தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-16 20:58 GMT

சேதமடைந்த நிழற்குடை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி விளாமரத்துபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. மேலும் அவ்வப்போது சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து விழுவதால் அங்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், வெம்பக்கோட்டை.

தரம் உயர்த்தப்படுமா?

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு இந்த மாணவர்கள் நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

சண்முகம், இனாம்ரெட்டியபட்டி.

விபத்து ஏற்படுத்தும் சாலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை மற்றும் ரெயில்வே பீடர் ரோடு ஆகியவை முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

விவசாயிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள வேண்டாங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாறன், இருக்கன்குடி.

குண்டும், குழியுமான சாலைதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் முறையான சாலை வசதி செய்யப்படாததால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்