தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-09 21:56 GMT

எரியாத தெரு விளக்குகள்

மதுரை வைகை வடகரை ஒபிளா படித்துறை பாலம் அருகே பூங்கா அருகில் இரவில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெரு விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்தாஸ், மதுரை.

வீணாகும் குடிநீர்

மதுரை மாவட்டம் கென்னட் ரோடு பகுதியில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டு இருக்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இத்துறை சார்ந்த அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணன், மதுரை.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் வேகத்தடை இல்லை. இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தருவார்களா?

பிரபாகரன், உசிலம்பட்டி, மதுரை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து வரும் சில தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பியும், சிக்னலை மதிக்காமலும் செல்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்த்திபன், மதுரை.தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தெரு நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் எழுமலை நகரப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவதுடன், கடித்து காயப்படுத்தும் நிலையும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால்பாண்டி,எழுமலை, மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்