தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டி, வத்திராயிருப்பு.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 9-வது வார்டு பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே கழிப்பறை வசதி வேண்டும். இப்பகுதியில் சிலர் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதிய கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செட்டியார்பட்டி.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பெரியவள்ளிக்குளம் 5-வது வார்டு பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தகுமார், பெரியவள்ளிக்குளம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ெபரும் இ்ன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதி பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் தபால்நிலைய வசதி இல்லை. ஆதலால் இப்பகுதியினர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தபால்நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைராசன், கிருஷ்ணன்கோவில்.