தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-07-09 20:28 GMT

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் பல நாட்களாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரராகவன், விரகனூர், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காண்டை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் போதிய பராமரிப்பின்றி விஷ பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே இங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமங்கலம், மதுரை.

அரசு பஸ் வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வின்னகுடி கிராமத்திற்கு இதுவரை அரசு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், கர்ப்பிணிகளும் 3 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன், வின்னகுடி, மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல், தே.கல்லுப்பட்டி, மதுரை.

காத்திருக்கும் பயணிகள்

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து பட்டூர், சேக்கிப்பட்டி, நத்தம் வழியாக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக காலை, இரவு நேரங்களில் போதிய பஸ் இல்லாததால் பயணிகள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிக்கந்தர் பாட்ஷா, பட்டூர், மதுரை

Tags:    

மேலும் செய்திகள்