பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

Update: 2022-11-30 21:05 GMT

தமிழில் பதாகை வேண்டும் 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வழி காட்டும் பதாகையும், அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் பதாகையும் ஆங்கிலத்தில் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் பாமர மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் பதாகை வைக்க வேண்டும். இதனால் வார்டுகளுக்கு செல்ல மிகவும் பேருதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.லோகநாதன், ஈரோடு.

பள்ளம் மூடப்படுமா? 

ஈரோடு சூளையில் அம்மா உணவகம் எதிரே முதலிதோட்டம் என்ற இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து பள்ளத்தை மூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சூளை.

குவிந்து கிடக்கும் குப்பை

சித்தோடு கோபால்சாமி கோவில் எதிரில், இந்திராநகர் பிரிவு, செட்டியார் தெரு உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சித்தோடு.

சுகாதாரக்கேடு

கோபி மேட்டுவளவு ரைஸ் மில் 4-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேட்டு்வளவு.


குடிநீர் பிரச்சினை

சித்தோடு பேரூராட்சி சந்தைக்கடை மேடு பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. உடனே பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சித்தோடு.


ஆபத்தான கட்டிடம் 

அம்மாபேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஊமாரெட்டியூர் பகுதியில் உள்ளது. இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கட்டிடத்தை சீரமைத்து ஏதாவது பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.ஹரிஹரன், ஊமாரெட்டியூர்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்