'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-30 18:45 GMT

கண்மாய் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள பெரிய கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் வளர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சசிதரன், திருப்பாச்சேத்தி.

அடிப்படை வசதிகள் தேவை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் தினமும் ராமேசுவரம், மதுரை போன்ற ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி, தடுப்புச்சுவர், நிழற்குடை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதநாயகம், தேவகோட்டை ரஸ்தா.

ஆற்றில் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தேனாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சமீபகாலமாக இறைச்சி கழிவுகள் முதலானவை அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி ஆறானது மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்யா, தேவகோட்டை.

பாலங்களை ஆய்வு செய்வார்களா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் மதுரை-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கண்மாய்களுக்கு செல்ல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பாலங்கள் சேதமடையும் நிலையில் விரிசலடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலங்களை ஆய்வு செய்து அதனை சீரமைக்க வேண்டும்.

சூரியபிரபா, திருப்புவனம்.

வாகனஓட்டிகள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தன் பகுதி சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணகுமார், கானாடுகாத்தான்.

Tags:    

மேலும் செய்திகள்