'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

Update: 2022-09-23 18:36 GMT

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காளி மார்க் சந்து முதல் காட்டுப்பள்ளி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காட்டுப்பள்ளி.

ஆக்கிரமிப்பு

ராமேசுவரம் கோவில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றி பக்தர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, ராமேசுவரம்.

பள்ளி கட்டிடத்தில் விரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சேதுபதி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் பள்ளிகட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சேதுபதிநகர்.

மீண்டும் பஸ் இயங்குமா?

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பஸ் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் இந்த பகுதியில் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபு, வேதாளை.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கொட்டகுடி ஊராட்சி விளாத்தூர் ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

Tags:    

மேலும் செய்திகள்