தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-06-18 17:27 GMT

குறுகலான திருப்பம்

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கடைவீதி சாலையின் திருப்ப பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சரக்கு வாகனத்தில் பயணம்

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிலர் சரக்கு வேனில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

காணாமல்போன பகுதி நேர நூலகம்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியான பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பகுதி நேர நூலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு உள்ள பெரியவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் இந்த நூலகத்தில் தொடர் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு இங்கு கிடைக்கும் நூல்களையும், அன்றாட செய்தித்தாள்களையும் வாசித்து பயன்பெற்று வந்தனர். தற்போது பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் இயங்கி வந்த பகுதிநேர நூலகம் இல்லாமலே போய்விட்டது. இதற்கான எந்த ஒரு காரணமும் இப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆகவே மிகவும் பயனுள்ளதாக இருந்த பகுதி நேர நூலகத்தினை மீண்டும் அமைத்து அனைத்து நிலை பொதுமக்களும் பயன்பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சத்தியசீலன், பெரம்பலூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:- 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீட்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும், அடிக்கடி பழுதடையும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தேவையூர்.

Tags:    

மேலும் செய்திகள்