தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-04 18:29 GMT

பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூர் ஊராட்சி, பழைய அரசமங்கலம் கிராமத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதி பெற்றும், பகுதி நேர நியாய விலை கடை திறக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதனால் எங்கள் கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நியாய விலை கடையில் இருந்து பொருட்கள் வாங்கி வருகிற அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வேகத்தடை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை உயரமாக இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வருவதுடன் தூர்வாரப்படும் கழிவுகள் உடனே அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்