தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-14 18:57 GMT

சுகாதாரமற்ற கழிவறை

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்திற்குள் சமயபுரம், முக்கொம்பு, பெட்டவாய்த்தலை வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே பயணிகளுக்காக கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவறை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் சுகாதாரமின்றி இருப்பதோடு, அவ்வழியே பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், சத்திரம் பஸ் நிலையம்.

உயர் கோபுர மின்விளக்கு வேண்டும்

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தச்சன்குறிச்சி கிராமம் நான்கு ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா, தச்சன்குறிச்சி.

சாலை அமைக்கப்படுமா?

திருச்சி பீரங்கி குளத்தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து தற்போது மண் சாலை போல் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் மழைநீர் செல்ல சாலையோரம் முறையான வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தங்கவேல், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி செல்லம்மாள் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்வரன், செல்லம்மாள் நகர்.

Tags:    

மேலும் செய்திகள்