தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-12 17:44 GMT

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி, வல்லகுளம், புங்கங்குழி, ஆண்டிப்பட்டி காடு, கோவிலூர், ஏலாக்குறிச்சி செல்லும் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகிருஷ்ணன், அரியலூர்.

சாதாரண கட்டண பஸ் இயக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து அரியலூர் மற்றும் திருச்சிக்கு விரைவு பஸ்களே இயக்கப்படுகிறது. சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ஏழ்மையான குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், ஜெயங்கொண்டம்.

தார் சாலை வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தியாகராஜ நகரில் இருந்து ஜெயலலிதா நகர் செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாகவும், வெயில் காலங்களில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கும் சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இளக்கியா, விளந்தை தியாகராஜ நகர்.

நேரடி பஸ் வசதி

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் பயணிகள் நலன் கருதி தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தான பயணியர் பஸ் சேவைகளை இயக்கி வருகிறார்கள். இதன் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பஸ் பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், நாமக்கல், ஈரோடு, அவிநாசி, மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல இன்று வரை நேரடி அரசு பஸ் வசதி இல்லை. பஸ் பயணிகள் ஊட்டி செல்வதென்றால் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன் கூடுதல் செலவும் ஆகிறது. சிமெண்டு நகரம் அரியலூரிலிருந்து ஊட்டி செல்வதற்கு தினமும் இரவு 9 மணிக்கு பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக புதிய நேரடி பஸ் சேவையினை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில்.

Tags:    

மேலும் செய்திகள்