தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-21 19:23 GMT

எரியாத தெருவிளக்குகள்

திருச்சி மாநகராட்சி கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்லும் வகையில் சாலை ஓரத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள பயணியர் நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் பேரில், பயனற்ற பயணியர் நிழற்கூடம் என்ற தலைப்பில் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகத்தினர் பயணியர் நிழற்கூடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகளை அகற்றி நிழற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாக சீரமைக்கப்பட்டதையடுத்து, வைரிசெட்டிப்பாளையம் பொதுமக்கள் தினத்தந்தி புகாரி பெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அபாயகரமான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்கம்பத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகள்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி 1 மின்கம்பி மீது மரக்கிளைகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி தீப்பொறி உண்டாகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இதுபோன்ற விபத்து நடைபெற்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு இடையூறான மயான கொட்டகை

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் ரெயில்வேகேட் சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் மயான கொட்டகை குடியிருப்பு பகுதியில் உள்ளது. மேலும் கொள்ளிடக்கரை, யாத்திரி நிவாஸ் ரோட்டிர்க்கும் , நெம்பர் 1 டோல்கேட், பைபாஸ் ரோடு , சமயபுரத்திர்க்கும் , ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பிரதானமான கிழக்கு வாசல் வழியாக செல்லும் சாலையோரத்தில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் மக்கள் இறந்தவர்களின் உடல் எரியூட்டும்போது பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் உள்ள மயான கொட்டகையை அகற்றிவிட்டு மக்கள் நடமாட்டம் இடல்லாத இடத்தில் மாற்றி அமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Tags:    

மேலும் செய்திகள்