தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-19 18:46 GMT

காய்ச்சல் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் 6-வது வார்டில் 20 ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால், சாலை வசதி உள்ளிட்டவை இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சி, பூங்குடி கிராமத்தில் உள்ள சடையாண்டி நகரில் சில மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதுபோல் சாலை தோண்டப்பட்டு ரோடு ரோலர் மூலம் சமன் செய்து பல மாதங்கள் கடந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை சீரமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், பெரமங்கலத்தில் இருந்து மூவானூர் வரை செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம், முசிறி புதிய பஸ் நிலையத்தில் செல்லும் நகர பஸ்கள் டி.புத்தூர் வழியாக துறையூர், திருபைஞ்சிலி மற்றும் டோல்கேட் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம் செல்லாமல் கைகாட்டி வழியாக செல்கின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை கிராமம் கீழத்தெரு, கரூர் மெயின்ரோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாவட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் மெயின் ரோடு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இந்த நிலையில் தினசரி செல்லும் சரக்கு வாகனங்களில் பலமுறை மின்கம்பிகள் உரசி அறுந்து விழுகிறது. பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பை மேட்டால் சுகாதார சீர்கேடு

திருச்சி அண்ணா நகர் வணிக வளாகம், குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திர நகர் , ஏ.பி.ஜே அப்துல் கலாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை வசதி, குப்பை தொட்டி வசதி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் படுத்திருக்கும் மாடுகள்

திருச்சி உறையூா் பகுதியிலிருந்து குழுமணி வரை செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. அதன் உாிமையாளா்கள் யாருமே கண்டுகொள்ளாமல் இருகின்றனா். இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக மாடுகள் மீது வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை அகலப்படுத்தப்படுமா?

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாவளைவு சாலையில் இருந்து அய்யம்பட்டி சாலை வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்