தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-16 19:21 GMT

நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் வேலூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் உப்பிலியபுரம் மற்றும் துறையூரிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் இரவு 9.30 மணிக்குள் சென்று விடுகின்றன. ஆகவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், சென்னை செல்ல இரவு 10.30-க்கு ஒரு பஸ்சை இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி கே.கே.நகர், அய்யப்பநகர் பகுதியில் உள்ள தாயுமானவர் தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் தெற்கு காலனி செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமத்திற்கு காவிரிக்கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும், குடிநீர் முறையாக வழங்கபடுவதில்லை. கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிரசாத விலை குறைக்கப்படுமா?

திருச்சி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்கள் ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்தன. தற்போது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு அதே பிரசாதங்கள் ரூ.30-க்கு விற்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் ஏழை-எளிய மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர். பிரசாத விலைப்பட்டியலோ, விலையேற்றம் பற்றிய அறிவிப்போ வைக்கப்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பக்தர்கள் நலன்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் தேங்கும் மழைநீர்

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள கரட்டாம்பட்டி 5-வது வார்டு காமாட்சியம்மன் கோவில் செல்லும் சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையை சமன்படுத்த பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தண்ணீரை அகற்றி சாலையை சமன்படுத்துவதுடன், சாலையோரம் வடிகால் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி வேண்டும்

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட ஜெய்லானியா மெயின் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மலைபோல் குவியும் குப்பைகள்

திருச்சி மாவட்டம், துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் பைபாஸ் சாலையை அடுத்து மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்