தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-01 18:27 GMT

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

பெரம்பலூர் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படு்ம் குப்பைகள் புறநகர பகுதிகளில் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தூர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர். எனவே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் பிரச்சினை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத நீர்நிலைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் இரவு நேரங்கள் நாய்கள் ஒன்றிணைந்து ரோட்டில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் மீது பாய்ந்து விரட்டுகிறது. ஒரு சில நேரங்களில் நாய்கள் கடித்தும் விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நாய்களில் சண்டையும் நடக்கிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பொரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்தே உள்ளனர். மேலும் அவர்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது கால்நடைகளுக்கான தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு பால் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்