தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-20 18:53 GMT

தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதுடன், சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரவுபாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்காழி ஏற்பயட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி விட்டு முக்கியமான இடங்களில் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் இளைஞர்கள்

பெரம்பலூர் நகர் பகுதியில் இளைஞர்களில் சிலர் ஆபத்தை உணராமல் தங்களது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வருகின்றனர். அவர்கள் ஹெல்மெட்டும் அணிவதில்லை. அவர்களின் செயல் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார், மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மருத்துமனையில் ஓய்வு அறை ஒதுக்கப்படுமா?

பெரம்பலூர் அரசு மருத்துமனையில் உள்நோயாளியாக தங்கியியிருந்து நிறைய பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். அவர்களை கூடவே இருந்து கவனிக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க அறைகள் இல்லை. இதனால் அவர்கள் திறந்த வெளியில் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு அறை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, வேலைக்கு செல்ல காலையில் சரியான நேரத்தில் பஸ் வசதி இல்லை.தெரணி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் செல்ல காலையில் ஒரேயொரு அரசு பஸ் மட்டுமே உள்ளது இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. எனவே தெரணி கிராமத்திற்கு பஸ் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்