தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, செல்லம்மாள் நகரில் இருந்து மங்களா நகர் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இச்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் ஒரு வாகனம் வரும் போது எதிரே வரும் வாகனம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
திருச்சி மாநகராட்சி, புத்தூர் பகுதி பிஷப் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலையோரம் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான பயணம்
திருச்சி மாவட்டம், கல்லணையில் இருந்து வேங்கூர் புத்தாபுரம், காந்திபுரம், வண்டிப்பாதை, ஒட்டக்குடி, கீழமுல்லக்குடி, சர்க்கார்பாளையம், பனையக்குறிச்சி ஆகிய கிராமங்கள் வழியாக சத்திரம் வரை காலை, மாலை நேரங்களில் குறைந்த அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதினால் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எரியாத தெருவிளக்குகள்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி 3-வது வார்டு மேல தெரு தாமரைகுளம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த ஒரு மாதங்களாக மின் விளக்குகள் எறிவது இல்லை. இதனால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால் இப்பகுதியில் மக்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேலூரில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழியில் தெரு முற்றத்தில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டால்மியாபுரம் அருகில் உள்ள பளிங்காநத்தம் கிராமத்தில் சந்தியாகப்பர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.