தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-22 19:06 GMT

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் சாலை ஓரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

குறுகிய பாலத்தால் போக்குவரத்திற்கு இடையூறு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வழியாக செல்லும் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையை மட்டும் விரிவாக்கம் செய்துவிட்டு திருமயம் அருகே உள்ள பாம்பாற்று பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டாமல் அதே குறுகிய பலமாக பழைய பாலம் இருந்து வருகிறது .இந்த சாலை வழியாக அதிகமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகிறது. வாகனங்கள் இந்த பாலம் அருகே செல்லும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமயம்.

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை ஒன்றியம், வாகவாசல் ஊராட்சி ராஜாபட்டி கிராமம் வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளதால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மனோகரன், ராஜாபட்டி.

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் அருகே விராலிமலை செல்லும் சாலையில் இருந்து செல்லுக்குடிக்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்சாலை முழுவதும் பெயர்ந்து உள்ளதால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். மேலும் குண்டும், குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கவிநாடு கண்மாய்.

எரியாத உயர் கோபுர மின் விளக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கேட் புதுகை நகரின் நுழைவு பகுதியாக உள்ளது. இந்த வழியாக அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு எரியாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுப்பட்டி கேட். 

Tags:    

மேலும் செய்திகள்