தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-08 18:48 GMT

பயன்படுத்த முடியாத குடிநீர் குழாய்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் கோல்டன்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயின் பிடி உடைந்தும், இதனை சுற்றி புதர்போல் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா, அன்னவாசல்.

ஊருக்குள் வராத அரசு பஸ்சால் மாணவர்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், செட்டியாபட்டியில் இருந்து முள்ளூர் கிராமம் வழியாக 12-ம் எண் கொண்ட அரசு பஸ் தினமும் மாலை 6 மணிக்கு புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் முள்ளூர் ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கிவிட்டு சென்ற இந்த பஸ் கடந்த 5 நாட்களாக பயணிகளை மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்று விடுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து தங்களின் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழையபடி முள்ளூர் ஊருக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், செட்டியாபட்டி.

Tags:    

மேலும் செய்திகள்