தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பாலத்துறையில் இருந்து தவுட்டுப்பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் சமைத்த வாத்து கறியுடன் டிபன் விற்பனை செய்யும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஓட்டல்களில் சாப்பிடுவதற்காக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கார்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை தார் சாலையில் ஓரத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் தார் சாலை ஓரத்தில் நிற்கின்றன. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதி வேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நல்லசிவம், பலத்துறை, கரூர்.