தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-03 18:08 GMT

அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையம்

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சியில் உள்ள அண்ணா நகர் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை இல்லை. இதனால் இப்பகுதி குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றி கருவேல மரங்கள் முளைத்து புதர்போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முள்ளூர், புதுக்கோட்டை.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து நிலையூர், கள்ளக்குறிச்சி வழியாக மணமேல்குடி வரை நாள் ஒன்றுக்கு 9 முறை சென்று வந்த பஸ்கள் தற்போது 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்