தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாற்காலி இன்றி வாசகர்கள் அவதி
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வந்து செய்தித்தாள் மற்றும் பல்வேறு புத்தகங்களை படித்து தங்களின் அறிவை வளர்த்துக்கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த நூலகத்தில் போதிய நாற்காலி வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுதாகர், பெரம்பலூர்.