பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி

புகாா் பெட்டி

Update: 2022-12-14 21:37 GMT

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? 

ஈரோடு கலைக்கல்லூரி அருகில் ரிங்ரோடு ரவுண்டானா பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. இதனால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு் வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ஈரோடு

பழுதடைந்த மின்கம்பம் 

அந்தியூர் தவுட்டுப்பாளையம் காளிதாஸ் 3-வது வீதியில் உள்ள மின் கம்பம் ஒன்று பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மின் கம்பம் உடைந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.

குப்பையை அகற்ற வேண்டும்

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு ரோடு வருகிறது. இந்த கரட்டூர் பிரிவு ரோட்டில் ஓரிடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

நிழற்குடை அமைக்கப்படுமா?

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதிப்படுகின்றனர். எனவே நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், குருமந்தூர் மேடு.

மின் விளக்கு தேவை

சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் ஊராட்சிக்கு உள்பட்ட கோம்புபள்ளம் முதல் தண்ணீர் பந்தல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக செல்வதில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு உள்ளது. எனவே மின் விளக்கு அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிமளம், கெஞ்சனூர்.

ஆபத்தான குழி 

பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகில் 2 இடங்களில் பெரிய குழிகள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த குழியில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் இந்த ரோடு வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவில் வாகனங்களில் செல்லும் சிலர் குழி இருப்பது தெரியாமல், வாகனங்களை அதில் இறக்கி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெருந்துறை

Tags:    

மேலும் செய்திகள்