தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

Update: 2022-09-06 18:21 GMT

பள்ளி மாணவர்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருவிழா நேரங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை சாலை கம்பங்களில் பொருத்துகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ஆர்.எஸ். மங்கலம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பாம்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?

ராமநாதபுரத்தில் இருந்து பல ஊர்களுக்கும் இயக்கப்படும் டவுன் பஸ்கள் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் இல்லாமையால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் பலரும் ஆபத்தான முறையி்ல் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். தேவைக்கேற்ப டவுன் பஸ்கள் இயக்க போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்றா டேனியல், ராமநாதபுரம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் நகர் சிகில் ராஜ வீதி ஊருணியை ஆக்கிரமித்து சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

பஸ் நிறுத்தம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 11வார்டு அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் தேவர்நகர் பகுதியில் பஸ் நிறுத்தம் கிடையாது. இதனால் பல மீட்டர் தூரம் சென்று இப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் ஏறி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்