முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

ஆவுடையார்கோவில் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.

Update: 2022-08-30 18:38 GMT

ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளை சுமந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்