மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ுத்தாலம் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே தேரழுந்தூரில்ஏரிக்கரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 2-ந் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பூத்தட்டு வீதி உலா, பூச்சொரிதல், சக்தி கரகம், அம்பாள் வீதி உலா உள்ளிட்டவை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக யானை குளக்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
தீக்குண்டத்தில் இறங்கினர்
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், மிராசுதார்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.