பூதவராயன்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பூதவராயன்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள பூதவராயன் பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தீமிதிதிருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அர்ஜூனன்-திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்து, சாமி வீதிஉலா, அரவான் கடவுள் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்வுகள் நடைபெற்றது.
விழாவில் நேற்று பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள், கோவில் முன்பு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.