திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-06-06 09:32 GMT

இதில் கல்வாய் உள்பட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். தீமிதி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட திரவுபதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வாய் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்