கடலூர் முதுநகர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கடலூர் முதுநகர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-07-02 16:11 GMT

கடலூர் முதுநகரில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பகாசூரனுக்கு அன்னமளித்தல், திரவுபதி அம்மன் திருக்கல்யாணமும், தினசரி இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காப்புகட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்