பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி விழா

பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.

Update: 2023-05-17 18:56 GMT

திருவரங்குளத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவிலில் கிடாய் வெட்டி சாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்