அக்கரை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.;

Update: 2022-09-04 16:52 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி பாமணி ஆற்றின் கீழ் கரையில் அக்கரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்