23 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் டிஜிட்டல் திறன் வகுப்புகள் - கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்
23 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் டிஜிட்டல் திறன் வகுப்புகளை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்.
மேலூர்
23 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் டிஜிட்டல் திறன் வகுப்புகளை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் திறன் வகுப்பு
மேலூர் அருகே உள்ள மேலவளவு அரசு மேல்நிலைப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பு பாடம் நடத்தும் திட்டத்தினை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- இத்திறன் வகுப்பறை திட்டமானது மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 23 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 3 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திறன் வகுப்பறை திட்டமானது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ்ரெபோனி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி, மேலூர் தாசில்தார் சரவணபெருமாள், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கரன், தமிழ் ஆசிரியர் அருணகிரி உட்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்து கேட்பு கூட்டம்
மேலும் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி, அய்யாபட்டி பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் பட்டமங்களபட்டியில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. பிர்தெளஸ் பாத்திமா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரொபோனி, சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு அளவீட்டில் மட்டுமே குவாரி பயன்படுத்த வேண்டும், உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்பட அனைவரது கருத்துகளும் பதிவு செய்யபட்டது. பாதுகாப்பு பணியில் கொட்டாம்பட்டி போலீசார் ஈடுபட்டனர்.