மீன்பிடிக்க சென்ற டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை?

நெமிலி அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற டிஜிட்டர் பேனர் கடை உரிமையாளர் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-30 18:23 GMT

காயங்களுடன் பிணம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மதிவாணன். இவரது மகன் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). காஞ்சீபுரத்தில் டிஜிட்டல் பேனர் கடை நடத்தி வந்தார். இவருக்கு லாவண்யா என்கிற மனைவியும், ருதேஷ், வேதேஷ் என்கிற இரண்டு மகன்களும் உண்டு.

இந்த நிலையில் லாரன்ஸ் நேற்று கீழ்வீதி ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாலை 4 மணியளவில் தலையில் பலத்த காயங்களுடன் ஏரிக்கு போகும் வழியில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

கொலை

அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

லாரன்ஸ் தலையில் ரத்த காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்