டிஐஜி விஜயகுமார் உடலுக்கு, டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி

டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2023-07-07 11:00 GMT

தேனி,

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தேனி ரத்னம் நகரில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.

அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்