டி.ஐ.ஜி. விஜயகுமார் உருவப்படத்திற்கு நாகை போலீசார் அஞ்சலி

டி.ஐ.ஜி. விஜயகுமார் உருவப்படத்திற்கு நாகை போலீசார் அஞ்சலி

Update: 2023-07-07 18:45 GMT

கோவை சரக போலீஸ் துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது, இந்திய போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங், டி.ஐ.ஜி. விஜயகுமார் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கென்னடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிரிழந்த டி.ஐ.ஜி. விஜயகுமார், 2018-19-ம் ஆண்டுகளில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, அவர் ஆற்றிய பணிகள் குறித்தும், கஜா புயல் காலங்களில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர், நாகூர், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும், தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி போலீசார் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்