பணியின் போது உயிரிழந்தஅங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

பணியின் போது உயிரிழந்த அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

Update: 2022-12-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 6 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். இவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பணியின்போது உயிரிழந்த அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களின் வாரிசுதார்களுக்கு சத்துணவு அமைப்பாளர, சமையலர், உதவியாளர் என 6 பெண்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்