கயத்தாறில் மின்னல் தாக்கி இறந்ததொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4லட்சம் நிதியுதவி

கயத்தாறில் மின்னல் தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4லட்சம் நிதியுதவி

Update: 2023-06-02 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் கடந்த வாரம் சாலிவாகனர் தெருவைச் சேர்ந்த சிவனுவேளாளர் என்பவரின் மகன் சுப்பையா (வயது 46). தொழிலாளி. இவர் கயத்தாறில் புதுக்கோட்டை சாலையில் ராமமூர்த்தி என்பவருடைய செங்கல் சூலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மாலை நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் சுப்பையா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவரது மனைவி மாரியம்மாள் கயத்தாறு தாசில்தார் மற்றும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோரிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் சுப்பையாவின் மனைவி மாரியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அவரை வரவழைத்து, கலெக்டர் செந்தில்ராஜ் அரசு நிவாரண நிதியாக ரூ.4லட்சத்தையும், அவருக்கு விதவை உதவித்தொகை சான்று மற்றும் இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர், கயத்தாறு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்