குருபரப்பள்ளி, ஓசூரில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் பலி

Update: 2023-05-11 18:17 GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி, ஓசூரில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் பலியாகினர்.

வாலிபர்

கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2 கட்டிகானப்பள்ளி விநாயகா நகரை சேர்ந்தவர் வெங்கடராமன். இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் குருபரப்பள்ளி டெல்டா கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மஞ்சுநாத் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி தாலுகா மாடசந்திரம் அருகே உள்ள கொரல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (55). கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது.

இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இ.பி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர் ஓசூர் காந்தி நகரில் தங்கி குமுதேப்பள்ளி அருகே உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலை தொடுதேப்பள்ளி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்