மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விவசாயி சாவு

Update: 2023-04-24 19:00 GMT

கிருஷ்ணகிரி அடுத்த இட்டிக்கல் அகரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் பாலக்குறி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்