பாப்பிரெட்டிப்பட்டி அருகேமொபட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Update: 2023-04-14 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் இருந்து மொபட்டில் பள்ளிப்பட்டி அருகே உள்ள சாலூருக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பீனியாறு அருகே சென்றபோது மொபட்டில் இருந்து நிலைதடுமாறி அவர் தவறி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ராமனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராமன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்