பர்கூர்:
பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளி பக்கமுள்ள பசவண்ண கோவிலை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 62). இவர் கடந்த மாதம் 17-ந் தேதி தனது நிலத்தில் உள்ள புளிய மரத்தில் புளி பறித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜூனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அர்ஜூனன் சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.